அஞ்சாதிரு, என் நெஞ்சமே,

தமிழ்

அஞ்சாதிரு, என் நெஞ்சமே, உன் கர்த்தர் துன்ப நாளிலே கண்பார்ப்போம் என்கிறார்; இக்கட்டில் திகையாதிரு, தகுந்த துணை உனக்கு தப்பாமல் செய்குவார். தாவீதும் யோபும் யோசேப்பும் அநேக நீதிமான்களும் உன்னிலும் வெகுவாய் கஸ்தி அடைந்தும், பக்தியில் வேரூன்றி ஏற்ற வேளையில் வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். கருத்தாய் தெய்வ தயவை எப்போதும் நம்பும் பிள்ளையை சகாயர் மறவார்; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் இரக்கமான கரத்தால் அணைத்து பாலிப்பார். என் நெஞ்சமே, மகிழ்ந்திரு; பேய், லோகம்,துன்பம் உனக்கு பொல்லாப்புச் செய்யாதே; இம்மானுவேல் உன் கன்மலை, அவர்மேல் வைத்த நம்பிக்கை அபத்தம் ஆகாதே.