அருள்நாதா நம்பிவந்தேன்,

தமிழ்

அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில்; பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில். தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால்; சுத்திசெய்வீர் மாசில்லாத ரத்தத்தால். துணை வேண்டி நம்பி வந்தேன், பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர். சக்தி வேண்டி நம்பி வந்தேன், ஞானம் பெலனும்; அக்னி நாவும் வல்ல வாக்கும் ஈந்திடும். இயேசு நாதா, நம்பி வந்தேன், தவறாமலே என்னை என்றும் தாங்கி நின்று காருமே.