அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!

தமிழ்

அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே. அல்லேலூயா! கொடூர சாவை மேற்கொண்டார்; பாதாள சேனையை வென்றார்; நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார். அல்லேலூயா! இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே; களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா! எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர். அல்லேலூயா!