அருளின் ஒளியைக் கண்டார்

தமிழ்

அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். கர்த்தன், பிறந்த பாலகன், கர்த்தத்துவமுள்ளோன்; சுத்த அவரின் நாமமே மெத்த அதிசயம். ஆலோசனையின் கர்த்தனே, சாலவே வல்லோனே, பூலோக சமாதானமே, மேலோக தந்தையே. தாவீதின் சிங்காசனத்தை மேவி நிலைகொள்ள கூவி நியாயம் நீதியால் ஏவி பலம் செய்வார்.