அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

தமிழ்

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண் மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. அம்மூவர் பார்த்தார் தூதன் தான்; வெண் ஆடை தூதன் சொல்லுவான்: நாதர் கலிலேயா செல்வார். பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே! என் சமாதானம், தாசரே! உயிர்த்த நாதர் கண்டோமே என்றோரைத் தோமா கேட்டானே; நம்பான், சந்தேகங்கொண்டானே. வா, தோமா, என் விலாவைப் பார், இதோ, என் கைகள் கால்கள் பார்; நம்பு, சந்தேகம் தீர் என்பார். தோமா சந்தேகம் தீர்ந்தனன்; விலா, கை, கால்கள் நோக்கினன்; என் நாதா! ஸ்வாமி! என்றனன். காணாமல் நம்பின் பாக்கியர்; மாறா விஸ்வாசம் வைப்பவர் மா நித்திய ஜீவன் பெறுவர். மா தூயதாம் இந்நாளில் நாம் நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்; பரனைப் போற்றி மகிழ்வோம். அல்லேலூயா!