தமிழ்
அன்போடு எம்மைப் போஷிக்கும்
பெத்தேலின் தெய்வமே
முன்னோரையும் நடத்தினீர்
கஷ்ட இவ்வாழ்விலே.
கிருபாசனமுன் படைப்போம்
எம் ஜெபம் ஸ்தோத்ரமும்
தலைமுறையாய்த் தேவரீர்
எம் தெய்வமாயிரும்.
மயங்கும் ஜீவ பாதையில்
மெய்ப் பாதை காட்டிடும்
அன்றன்றுமே நீர் தருவீர்
ஆகாரம் வஸ்திரமும்.
இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
பிதாவின் வீட்டினில்
சேர்ந்திளைப்பாறுமளவும்
காப்பீர் உம் மறைவில்.
இவ்வாறான பேர் நன்மைக்காய்
பணிந்து கெஞ்சினோம்
நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
சுதந்தரமுமாம்.