ஆண்டவா பிரசன்னமாகி

தமிழ்

ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்; ஆசை காட்டும் தாசர்மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும். அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர். ஆசையோடு நிற்கிறோமே, ஆசீர்வாதம் ஊற்றுவீர். தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்; உந்தன் திவ்விய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம். ஆண்டவா , மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர்; அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர். தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்; பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை தந்து ஆசீர்வதியும்.