ஆ கர்த்தாவே, தாழ்மையாக

தமிழ்

ஆ கர்த்தாவே, தாழ்மையாக திருப் பாதத்தண்டையே தெண்டனிட ஆவலாக வந்தேன், நல்ல இயேசுவே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே, ஞான மணவாளனே; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன். என் பிரார்த்தனையைக் கேளும், அத்தியந்த பணிவாய்; கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்; உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்.