இயேசுவே, உம்மை தியானித்தால்

தமிழ்

இயேசுவே, உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே; கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே, இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்; நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் யார் சொல்ல முடியும்? இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்; அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார். இயேசுவே, எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே; இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே.