இன்று கிறிஸ்து எழுந்தார்,

தமிழ்

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா! அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! பாடநுபவித்தவர், அல்லேலூயா! ரட்சிப்புக்குக் காரணர், அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!