இயேசுவின் கைகள் காக்க,

தமிழ்

இயேசுவின் கைகள் காக்க, மார்பினில் சாருவேன்; பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன். பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும் தூதரின் இன்ப கீதம் பூரிப்புண்டாக்கிவிடும். இயேசுவின் கைகள் காக்க, பாழ்லோகின் கவலை சோதனை பாவக் கேடும் தாக்காது உள்ளத்தை; கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே; வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே. இயேசு என் இன்பக் கோட்டை; எனக்காய் மாண்டோரை சார்ந்தென்றும் நிற்பேன், நீரே நித்திய கன்மலை. காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட, பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட.