என் ஆவி ஆன்மா தேகமும்

தமிழ்

என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால் பலி நான் உமக்கே.