என்தன் ஜீவன், இயேசுவே,

தமிழ்

என்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே; எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும். என்தன் கை பேரன்பினால் ஏவப்படும்; என்தன் கால் சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும். என்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய் மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும். என்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கிகரிப்பீர்; புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும். என்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்துவிட்டேனே; என்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர். திருப் பாதம் பற்றினேன்; என்தன் நேசம் ஊற்றினேன்; என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.