என் முன்னே மேய்ப்பர் போகிறார்;

தமிழ்

என் முன்னே மேய்ப்பர் போகிறார்; நல்மேய்ப்பராகக் காக்கிறார்; ஓர்காலும் என்னைக் கைவிடார்; நேர் பாத காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்! என் முன்னே சென்று போகிறார்! நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன் அன்போடு பின்சென்றேகுவேன். கார் மேகம் வந்து மூடினும், சீர் ஜோதி தோன்றி வீசினும், என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்; என்றைக்கும் முன்னே போகிறார். மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன், தெய்வீக கையால் தாங்குமேன்; எவ்விக்கினம் வந்தாலும் நீர் இவ்வேழைமுன்னே போகிறீர். ஒப்பற்ற உம் காருணியத்தால் இப்பூமி பாடு தீருங்கால், நீர் சாவை வெல்லச் செய்குவீர், பேரின்பம் காட்டி முன்செல்வீர்.