ஒப்பில்லா - திரு இரா!

தமிழ்

ஒப்பில்லா - திரு இரா! இதில் தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம். ஒப்பில்லா - திரு இரா! யாவையும் ஆளும் மா தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை எத்தனை தாழ்த்துகிறார்; எத்தனை தாழ்த்துகிறார்; ஒப்பில்லா - திரு இரா! ஜென்மித்தார் மேசியா; தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து, பராபரனை பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.