கூர் ஆணி தேகம் பாய

தமிழ்

கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப்பட்டார் பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும் என்றார். தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே, நானுங் கூர் ஆணியை. உம் சாந்தக் கண்டிதத்தை நான் நித்தம் இகழ்ந்தேன்; எனக்கும் மன்னிப்பீயும், எண்ணாமல் நான் செய்தேன். ஆ, இன்ப நேச ஆழி! ஆ, திவ்விய உருக்கம்! நிந்திப்போர் அறியாமல் செய் பாவம் மன்னியும்.