துக்கம் கொண்டாட வாருமே,

தமிழ்

துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார். உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!