பிறந்தார் ஓர் பாலகன்

தமிழ்

பிறந்தார் ஓர் பாலகன் படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும்; ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். பயந்தான் ஏரோதுவும் பாலன் ராஜன் என்றே; பசும் பெத்லேம் பாலரை பதைபதைக்கக் கொன்றே. கன்னி பாலா வாழ்க நீர்! நன்னலமாம் அன்பே! பண்புடன் தந்தருள்வீர் விண் வாழ்வில் நித்திய இன்பே. ஆதி அந்தம் அவரே, ஆர்ப்பரிப்போம் நாமே; வான் கிழியப் பாடுவோம் விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.