கர்த்தாவே, யுகயுகமாய்

தமிழ்

கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்; உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார். கர்த்தாவே, யுக யுகமாய் எம் துணை ஆயினீர்; இக்காட்டில் நற் சகாயராய் எம் நித்திய வீடாவீர்.