காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்;

தமிழ்

காரிருளில், என் நேச தீபமே, நடத்துமேன்; வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூரக்காட்சி ஆசியேன்; ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமேன். என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே; ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமேன்; உல்லாசம் நாடினேன், திகிலிலும் வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும். இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்; இனிமேலும் காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்; உதய நேரம் வர, களிப்பேன்; மறைந்து போன நேசரைக் காண்பேன்