தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே

தமிழ்

தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே; கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய், யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில் தனித்திரு நாளும் அவர் பாதத்தில் யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த, என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல; இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை, நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து, சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு, அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க, முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.