பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;

தமிழ்

பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே; பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும் பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும். எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே; கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும் பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்; உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன். நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில் பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.