பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;

தமிழ்

பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே; அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.