ரட்சா பெருமானே, பாரும்,

தமிழ்

ரட்சா பெருமானே, பாரும், புண்ணிய பாதம் அண்டினோம் சுத்தமாக்கி சீரைத் தாரும், தேடிவந்து நிற்கிறோம்! இயேசு நாதா, இயேசு நாதா உந்தன் சொந்தமாயினோம் மேய்ப்பன் போல முந்திச் சென்றும் பாதுகாத்தும் வருவீர்; ஜீவ தண்ணீரண்டை என்றும் இளைப்பாறச் செய்குவீர்; இயேசு நாதா, இயேசு நாதா உந்தன் சொந்தமாயினோம் நீதி பாதை தவறாமல் நேசமாய் நடத்துவீர்; மோசம் பயமுமில்லாமல் தங்கச் செய்து தாங்குவீர்; இயேசு நாதா, இயேசு நாதா உந்தன் சொந்தமாயினோம் ஜீவ கால பரியந்தம் மேய்த்தும் காத்தும் வருவீர்; பின்பு மோட்ச பேரானந்தம் தந்து வாழச் செய்குவீர்; இயேசு நாதா, இயேசு நாதா உந்தன் சொந்தமாயினோம்