விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;

தமிழ்

விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்; பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்! நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே, மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே! உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே; நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே! அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும், என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ? உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ? என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்; என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்! மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்; உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.