நான் பாவிதான் -ஆனாலும் நீர்

தமிழ்

நான் பாவிதான் -ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் - என் நெஞ்சிலே கறை பிடித்துக் கெட்டேனே என் கறை நீங்க இப்போதே, என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் - மா பயத்தால் திகைத்து, பாவபாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால், என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் - மெய்யாயினும் சீர், நேர்மை, செல்வம், மோட்சமும் அடைவதற்கு உம்மிடம் என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் - இரங்குவீர் அணைத்து, காத்து, ரட்சிப்பீர், அருளாம் செல்வம் அளிப்பீர்; என் மீட்பரே, வந்தேன். நான் பாவிதான் - அன்பாக நீர் நீங்கா தடைகள் நீக்கினீர்; உமக்கு சொந்தம் ஆக்கினீர்; என் மீட்பரே, வந்தேன்.