நீர் தந்த நன்மை யாவையும்

தமிழ்

நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்வேனே. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர்; இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தாங்கினீர். அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர்; கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே, பொழிந்தீர். இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். புகழ்ச்சி, துதி, தோத்திரம், ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் எழும்பத் தகுமே.