நாற்பது நாள் ராப் பகல்

தமிழ்

நாற்பது நாள் ராப் பகல் வனவாசம் பண்ணினீர்; நாற்பது நாள் ராப் பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர். ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகத் துணை; மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை. உம்மைப்போல நாங்களும் லோகத்தை வெறுக்கவும், உபவாசம் பண்ணவும் ஜெபிக்கவும் கற்பியும். சாத்தான் சீறி எதிர்க்கும் போதெம் தேகம் ஆவியை சோர்ந்திடாமல் காத்திடும், வென்றீரே நீர் அவனை. அப்போதெங்கள் ஆவிக்கும் மா சமாதானம் உண்டாம்; தூதர் கூட்டம் சேவிக்கும் பாக்கியவான்கள் ஆகுவோம்.