என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை

தமிழ்

என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்; விண்மீன்களும் பேரிடி முழக்கமும் உம் வல்லமை எடுத்துரைக்குதே. என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே! நீர் வல்லவர் ! மா வல்லவர் ! போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா ! நீர் வல்லவர் ! மா வல்லவர் ! காடுகளின் பசும் மரங்கள் மீது கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்; உயர் மலை உன்னத காட்சி கண்டேன், தென்றல் காற்றும் தெளிநீரோடையும் --- என் தேவ பிதா தம் ஏக மைந்தனையும் மரிக்கவே அனுப்பி வைத்தாரே; சிலுவையில் என் பாவ பாரமேற்று ரத்தம் சிந்தி பாவ பலியானார் --- என் மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு என்னைச் சேர்க்க இயேசு வருவாரே உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும் வல்லவரை வணங்கித் தொழுவேன் --- என்