உன்னில் நானே மகிமைப் படுவேன்

தமிழ்

உன்னில் நானே மகிமைப் படுவேன் உன்னை மேன்மையாய் வைத்திடுவேன் உன்னை நானே தெரிந்து கொண்டேன் உன்னோடு நான் இருப்பேன் - இஸ்ரவேலே உன்னோடு நான் இருப்பேன் 1. வல்லமை வரங்கள் தந்திடுவேன் அதிசயங்கள் பல செய்திடுவேன் உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய் இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய் அற்புதங்கள் செய்திடுவேன் 2. உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன் அற்புதங்கள் பல செய்திடுவேன் வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமே சுகமும் பலத்தையும் பெற்றிடுவாய் ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன் 3. சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன் சாதனைகள் பல செய்திடுவாய் கபடில்லா இதயத்தை தந்திடுவேன் கசப்பும் வருத்தமும் மாறிடுமே சமாதனம் தந்திடுவேன்