உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

தமிழ்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் பல்லவி உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசையா ஸ்தோத்திரம் - (4) சரணங்கள் 1. உலகம் வெறுக்கையில் நீரோ அணைக்கிறீர் உமது அணைப்பிலே அந்த வெறுப்பை மறக்கின்றேன் 2. கண்ணின் மணிபோல என்னைக் காக்கின்றீர் உமது சமூகமே தினம் எனக்குத் தீபமே 3. நீரே என் செல்வம் ஒப்பற்ற என் செல்வம் உம்மில் மகிழ்கின்றேன் - நான் என்னை மறக்கின்றேன்