எனக்காய் யார் போவார்

தமிழ்

எனக்காய் யார் போவார் பாடுகள் எனக்காய் யார் சகிப்பார் திறப்பின் வாசலில் நிற்பவன் யார் என்றேசு அழைக்கின்றார் உன்னை 1. புத்தியுள்ள கன்னிகை போல் விழித்திடு விசுவாசியே அழியும் ஜனம் மீட்கப்பட ஜெபித்திடு விசுவாசியே ( என்றும் ) 2. புல்லுள்ள இடங்களிலே மேய்ச்சல் காட்டிடுவார் ஆத்துமாவை தினம் தேற்றி ஆறுதல் படுத்திடுவார் ( உன்னை ) 3. கன்னியர் வாலிபரே கர்த்தருக்காய் புறப்படுங்கள் வருத்தப்பட்டு சுமை சுமப்போரை அவரண்டை வந்திடுங்கள் ( மேய்ப்பன் )