கர்த்தர் தாமே நம் முன்னே போவார்

தமிழ்

கர்த்தர் தாமே நம் முன்னே போவார் கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) 1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம் விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர் 2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர் 3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான் மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் - (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை - (2) --- கர்த்தர்