கலங்கிடாதே நீ திகைத்திடாதே

தமிழ்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே (2) கலங்கிடாதே.... 1. மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மானிலத்தோர் உன்னை மறந்து போனாலும் - (2) மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே - (2) அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர் 2. கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும் - (2) கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே - (2) அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர் 3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன் உனக்காகவே மனம் உருகியே நின்றேன் - (2) உந்தனை எந்தன் கரமதில் வரைந்து உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் - (2) அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவீர் அமைதி தரவே வந்திடுவீர்