கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

தமிழ்

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும் அவரே எந்தன் ஒளியானவர் இரட்சிப்புமானவர் அவரேயாவார் 1. தீங்கு நாளில் அவர் என்னை தன் கூடார மறைவில் ஒளித்து வைத்தார் என் சத்ருக்கள் வெட்கி நாண கன்மலை மீதென்னை உயர்த்திடுவார் ஆனந்த பலிதனை செலுத்தியே நான் கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன் 2. சத்ருக்களும் பகைஞர்களும் பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும் என் மாம்சத்தை பட்சித்திட என்னையே நெருக்கின வேளைகளில் கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய் 3. தந்தை தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார் ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தரின் நன்மையை கண்டடைவேன் திட மனதோடு நான் காத்திருப்பேன் ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே