கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

தமிழ்

கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறி போகவில்ல தேவன் சொன்ன வாக்குத்தத்தங்கள் ஒன்றும் விலகி போகவில்ல விலகி போகவில்ல வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல வாக்குத்தத்தங்கள் விலகவில்ல (2) பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரனல்ல (2) 1. உன்னைவிட்டு விலக மாட்டேன் உன்னை கைவிட மாட்டேன் என்று அவர் பொய் சொல்லல (2) என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் 2. மதிலை இடிக்கச் செய்தார் நதியை கடக்கச் செய்தார் எனக்காய் யாவையும் செய்தார் (2) வாக்குத்தத்தங்கள் வாழ்வில் தந்திட்டார் வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள்