துதி துதி என் மனமே

தமிழ்

துதி துதி என் மனமே துதிகட்குள் வசிப்பவரை எல்லா நாட்களும் செய்திடும் நன்மைகளை நினைத்து நன்றியுடன் பாடு மனமே - அல்லேலுயா நன்றியுடன் பாடு மனமே 1. அன்னையைப் போல அவர் என்னை அரவணைத்தாற்றிடுவார் அவர் அன்புள்ள மார்பதனில் - நான் இன்பமாக இளைப்பாறுவேன் – நான் --- துதி 2. சகாய பர்வதமே வல்ல கோட்டையும் அரணுமாமே ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால் எந்தசேதமின்றி காக்கவல்லோ --- துதி 3. சிங்கமோ விரியன் பாம்போ பால சிங்கமோ வலு சர்ப்பமோ அதன் தலையதை நசுக்கிடவே தக்கபெலன் தருபவரே --- துதி