துதிப்பேன் உம்மை துதிப்பேன்

தமிழ்

துதிப்பேன் உம்மை துதிப்பேன் மகிமை செலுத்தி துதிப்பேன் (2) துதியும் கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே (2) 1. கிருபைகள் என்னில் பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் --- துதியும் 2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர் வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர் மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே --- துதியும் 3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர் உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் மகிமை கனமும் எல்லாம் உமக்கே தேவா உமக்கே --- துதியும் அல்லேலூயா (3) ஆமேன்