புது வாழ்வு தந்தவரே

தமிழ்

புது வாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே (2) நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கின்றோம் நன்றி உமக்கு நன்றி மன நிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2) குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2) அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல் (2) புதியவைகள் தோன்றச் செய்தீர் சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் (2) அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்ததெல்லாம் கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம் கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் (2) அதற்கு – நன்றி…