Aagaadhadhu Edhuvumillai

தமிழ்

ஆகாதது எதுவுமில்லை உம்மால் ஆகாதது எதுவுமில்லை ஆகாதது எதுவுமில்லை உம்மால் ஆகாதது எதுவுமில்லை அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் ஆகாதது எதுவுமில்லை உம்மால் ஆகாதது எதுவுமில்லை துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும் எல்லாம் உம்மால் ஆகும் உம்மால் ஆகும் எல்லாம் உம்மால் ஆகும் ஆகாதது எதுவுமில்லை உம்மால் ஆகாதது எதுவுமில்லை அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத் தூக்கி விட்டீர் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா