Aagamangal pugazh

தமிழ்

1.ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருநாதா நமோ நமோ ஆயர் வந்தனை செய் பாதா நமோ நமோ- அருரூபா 2. மாக மண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுவாசா நமோ நமோ வான சங்கம விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா 3. நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா 4. ஏக மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திரு நாமா நமோ நமோ இறையோனே 5. அறிவி நுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராபர சீலா நமோ நமோ அருளாளா 6. பொறிவினை ய்றாஅத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புலன் முழுதாள் அதிகாரா நமோ நமோ புது வேதா 7. நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணோனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ நெறி நீதா 8. இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பறைகள் பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய தூதா நமோ நமோ இறையோனே