Aar Ivar Aaraaro

தமிழ்

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்த பரப்பொருள் தானிவரோ? சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது தேவனின் கண்மணியோ? மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ? – ஆர் 5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம் தீர்த்திடும் பானமோதான்? ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்தானோ? – ஆர்