Aarainthu Paarum Karthare

தமிழ்

ஆராய்ந்து பாரும் கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் . 2. ஆராயும் எந்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் ; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர். 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் ; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் . 4. ஆராயும் சிந்தை யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும். 5. ஆராயும் மறைவிடத்தை உமா தூய கண்ணினால் ; ஆரோசிப்பேன் என் பாவத்தை உம பேரருளினால் . 6. இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன் ; உம சரணார விந்ததில் பணிந்து போற்றுவேன்