Aathumakkal Meippare

தமிழ்

ஆத்துமாக்கள் மேய்ப்பரே மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும் நாசமோசம் இன்றியே காரும் நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல் காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர் சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும் கர்த்தரே நடத்திடும். 4.புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண் குளிர உம்மையும் காணும் பாக்கியம் அருளும்.