Aathumame En Muzhu Ullame

தமிழ்

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழுதேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே