Aaviyai Arulume Swamy

தமிழ்

ஆவியை அருளுமே , சுவாமீ , எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே 1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ? நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ? முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ? முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? — ஆவியை 2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம், பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் , தேவ சமாதானம் , நற்குணம் , தயவு, திட விசுவாசம் சிறிதெனுமில்லை — ஆவியை 3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்; திரி யவியாமலே தீண்டியே யேற்றும் , பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் , பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் — ஆவியை