தமிழ்
அகோர காற்றடித்ததே
ஆ சீஷர் தத்தளித்ததே
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்
மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர்
எழும்பும் என்க தேவரீர்
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு
அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் சிசிபோலே
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்
துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு