Aiya Nan Vanthen

தமிழ்

ஐயையா, நான் வந்தேன் - தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன் 1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர் - தயை செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன் தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா 3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை, எத்தனையோ! இவை திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித் தென்னை அரவணையும் - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத் தத்தங்களால் தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா 5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும் மாறி அகன்றதுவே - இனி திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் தேவாட்டுக்குட்டி, வந்தேன் --- ஐயையா