Alleluah Alleluah

தமிழ்

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. 3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் அம்மூவர் பார்த்தார் தூதன்தான்; வெண் ஆடை தூதன் செல்லுவான்; நாதர் கலிலேயா செல்வார் 4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் பயந்த சீஷர் ராவிலே கண்டார் கேட்டார் தம் நாதரே! என் சமாதானம் உமக்கே! 5.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் உயிர்த்த நாதர் கண்டோமே என்றோரைத் தோமா கேட்டானே; நம்பான் சந்தேகங்கொண்டானே. 6.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் வா தோமா என் விலாவைப் பார்; இதோ என் கைகள் கால்கள் பார்; நம்பு சந்தேகம் தீர் என்பார். 7.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் தோமா சந்தேகம் தீர்ந்தனன்; விலா கை கால்கள் நோக்கினன்; என் நாதா! ஸ்வாமி! என்றனன். 8.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் காணாமல் நம்பின பாக்கியர்; மாறா விஷ்வாசம் வைப்பவர் அமர வாழ்வு பெறுவர். 9.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ மாந்தரே நாம் பாடுவோம் மா தூயதாம் இந்நாளில் நாம் நம் பாடல் தோத்ரம் படைப்போம்; பரனைப்போற்றி மகிழ்வோம் அல்லேலூயா!