Anbodu Yemmai Bosikkum

தமிழ்

அன்போடு எம்மைப் போஷிக்கும் பெத்தேலின் தெய்வமே ; முன்னோரையும் நடத்தினீர் கஷ்ட இவ்வாழ்விலே . 2.கிருபாசன்முன் படைப்போம் எம் ஜெபம் ஸ்தோத்ரமும் ; தலைமுறையாத் தேவரீர் எம் தெய்வமாயிரும் . 3.மயங்கும் ஜீவா பாதையில் மெய்ப் பாதை காட்டிடும் ; அன்றன்றுமே நீர் தருவீர் ஆகாரம் வஸ்திரமும் . 4.இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து பிதாவின் வீட்டினில் சேர்ந்திளைப்பாருமளவும் காப்பீர் உம் மறைவில் . 5.இவ்வாறான பேர் நன்மைக்காய் பணிந்து கெஞ்சினோம் நீர் எம் தெய்வம் என்றுமே சுதந்தருமுமாம்